Skip to content

வந்துட்டான்ய்யா…வந்துட்டான்…

August 14, 2010

கொஞ்ச நாளாவே நம்ம மெட்ராசுல I.T ஆளுங்கள பாத்தாலே பலருக்கு செம்ம காண்டு.
ஏதோ ஒரு மொக்க படம் பாத்துட்ருந்தேன்…அதுல நாலு வெட்டி பசங்க. ஒருத்தன் சொல்றான்…
“எல்லா ஏரியாலவும் இந்த I.T ஆளுங்க புகுந்துட்டு, நாம வீடு தேடி கஷ்ட பற்றுந்த போது எடம் கொடுத்து காப்பதுனது இந்த குப்பம்தான்…இதுக்கு நாம எதாச்சும் செய்யணும்…”
இவனுக்கு குப்பத்து மேல நல்ல எண்ணமா இல்ல I.T ஆளுங்க மேல நா சொன்ன அந்த காண்டா ? புரீலபா…

“த்த்தா…பேசற பாஷையும் புரியாது ஒரு மயிரும் புரியாது…வந்துட்டாங்கய்யா…களுத்துல தொங்கவுட்டுக்குனு…சொம்ம்மா…”
ஒரு bus conductor கடுப்புல பொலம்பிட்டு இருந்தான்…சில்ற இல்லாத நம்ம ஹிந்திகார புள்ளைய பாத்து…
பொழைக்க வந்தவனுக்கு உதவி பண்ணலைநாலும் பரவா இல்ல. பாவம்… ஏன் இப்டி அசிங்கப்படுத்தணும்?

ஆட்டோகாரங்க பொதுவா எல்லருயும் காலி பண்றது வழக்கம்…இதுல “களுத்துல தொங்கவுட்டுக்குனு” ஒருத்தன் வந்தா…நாமம்தான் !

நானும் ரெண்டு வருஷம் “களுத்துல தொங்கவுட்டுக்குனு”தான் இருந்தேன்…ஆனா office’ல மட்டும்தான் தொங்கவுட்டுக்குனு இருப்பேன்…office’க்கு வெளியில அந்த ID-Card’அ மாட்டிட்டு இருக்க எனக்கும் அசிங்கமாத்தான் இருக்கும்.
அந்த வேலைல கேவல பொழப்பு இருந்துது. மத்த வேலைகள்ல இல்லாத ஒரு தனிப்பட்ட கேவலம் அதுல எதுவும் பெருசா இல்ல…

அமெரிக்காவுல இருக்குறவனுக்கு, அங்க இருக்குற இந்தியன பாத்து இவன் வெள்ளைக்காரன் இல்லைங்கரத விட பெரிய கடுப்பு “நம்ம ஊர் ஆளுங்க பல பேரோட இவனுங்க நெறையா சம்பாதிக்குறாங்க” ங்கரதுதான்.
அதே கருமாந்தரம்’தான்…வேற ஊருலிருந்து வந்து “நல்லா” (??!!) சம்பாதிக்கர்த பாத்து நம்ம ஊர்ல கஷ்ட படுறவன் உருவாக்குன “I.T Guy” image இப்போ கொடி கட்டி பறக்குது.
அட free’யா விடுங்க boss. தில்லு முல்லு’ல சுப்ரமணிய பாரதி சொல்ற மாதிரி “எல்லாம் ஐ வாஸ்…” நீங்க சம்பாதிக்காதத எதுவும் இவங்க சம்பாதிக்கல.
உங்களோட இவங்க ஒண்ணும் பெரிசா வித்தியாசம் இல்ல…கொஞ்சம் தேவ இல்லாத வெட்டி பந்தா etc. etc. இருக்கும்.

“ஒரே குட்டைல ஊருன மட்டைங்கதான்”

பின் குறிப்பு : தமிழ் வெறியர்களே…இந்த கொச்சை தமிழுக்கு வருந்துகிறேன்.

Advertisements
2 Comments leave one →
  1. Kumar Appaiah permalink
    August 26, 2010 10:32 am

    அப்பொழுது நீயும் இந்த “வெட்டி பந்தா” காட்டுவதில் ஈடு படுகிறாய் என புரிந்துகொள்வதா?

    நல்ல blog post. உங்கள் தமிழ் ரசிக பெருமக்களின் நலன்கருதி இதைப்போல் இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.  🙂 

  2. ydswaran permalink*
    August 26, 2010 10:49 am

    திரு குமார் அவர்களே…
    நான் இப்பொழுது தங்களை போல ஒரு மாணவன்தான்…
    நான் அந்த வேலை செய்துகொண்டிருந்தபோது மட்டும் அல்ல… எப்போதும் ”வெட்டி பந்தா’வில் ஈடுபடுவதில் ஈடுபாடு காட்டியதில்லை…
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி… 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s